November 28, 2010

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்.ஜே. (பி.ஜே)

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
தீயவன் ஒரு செய்தியை கொண்டுவந்தால் அதை தீர விசாரியுங்கள் இல்லையேல் அறியாமல் ஒரு சமுதாயத்திற்கு தீங்கிழைத்து பின் வருந்தக்கூடும்” என அல்லாஹ் திருகுர்ஆனில் (49:6) கூறியிருப்பதை நாம் உணர்ந்து நடக்க வேண்டும். “கேள்விப்படுவதை எல்லாம் பரப்புவதே ஒருவன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்றாகும்” என்ற நபி மொழிக்கு இணங்க ஏகத்துவத்தை பின்பற்றுவதாக கூறும் நாம் எந்த ஒரு செய்தியையும் ஆராய்ந்து அதன் உண்மைத் தன்மையை உணராமல் பரப்பிவிடக்கூடாது.

அல்லாஹ் தஆலா திருமறையில் “பாதுகாப்பு பயம் பற்றிய செய்தி கிடைத்தால் உடனே பரப்பி விடுகின்றனர்.அதை அதிகாரமுள்ளவர்களிடத்தில் கொண்ட சென்றிருந்தால் அதன் உண்மை தன்மையை அவர்கள் ஆராய்ந்திருப்பர்” என்று கூறுவதன் மூலம் பொருப்பில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் பொய் பரவுவதற்கு காரணமாகி விட கூடாது.

அந்த வகையில் மக்களிடையே மார்க்க அறிஞர் என அறியப்படும் இவர் குர்ஆனை ஆராய்ந்து தான் பின்பற்ற வேண்டும். ஸஹாபாக்கள் உட்பட எவரது கூற்றையும் ஆதாரமின்றி பின்பற்ற கூடாது! (அருமை ஸஹாபா அபுல் ஆஸ் (ரழி) அவர்களை கிரிமினல் என்று விமர்சித்தார். ஆரம்பத்தில் நான் அந்த அர்த்ததில் சொல்லவில்லை என மழுப்பிய அவர், அதன் பிறகு கிரிமினலை கிரிமினல் என்றால் என்ன தவறு? என வாதித்தார் என்பது தனி கதை) எனக்கூறும் இவர் நடைமுறையில் இதற்கு நேர் முரணாக தனக்குவரும் ஆதாரமற்ற செய்திகளை அப்படியே பரப்பிவிடுவதை பலசந்தர்பங்களில் செய்திருக்கிறார்.


சமூக விஷயங்களில் மட்டும் அல்ல மார்க்க விஷயத்திலும் பொய் சொல்லக் கூடியவர் என்பதற்கு முஜிபுர் ரஹ்மான் உமரி சொல்லும் சம்பவம் சாட்சியாகிறது. ஒரு விவாதத்தின் போது எதிர் தரப்பினர் ஸஹீஹான ஹதீஸை எடுத்து வைத்தால் என்ன செய்வது? என இவரது அணியைப் சேர்ந்த ஒருவர் கேட்டப்பொழுது, அதற்கென்ன? அதை நாம் ளயீஃப் (பலவீனம்) ஆக்கிடுவோம் என்று சொன்ன செய்தி. இவர் இதுவரை சொன்ன மார்க்கத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.




வக்ஃப் ஊழலும் வக்கீல் நோட்டீசும்
வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ ஊழலுக்கு துணைப் போனார் என்று உணர்வில் எழுதிவிட்டு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் பின்னங்கால் பிடறியில் அடிக்க பின்வாங்கினார்.


இரு முறை இறந்த நாகூர் ஹனிஃபா
பாடகர் நாகூர் ஹனிஃபா இறந்து விட்டார் என்று வந்த செய்தியை ஆராயமல் மேடையில் அறிவித்து மாட்டிக் கொண்டதோடு மட்டும் அல்லாமல் அந்த விஷயத்தை எடிட் செய்யாமல் டிவியில் ஒளிபரப்பி இறக்காத நாகூர் ஹனிபாஃவை இரண்டுமுறை சாகடித்தார்.


இஸ்லாத்தை தழுவிய பில்கேட்ஸ் ?
பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவி விட்டதாக வந்த செய்தியை ஆராயாமல் சேப்பாக்கம் மேடையிலே அள்ளிவிட்டு பின்னர் சமாளித்தார். (பெரியார் தசானை கண்காணிப்பவர் பில்கேட்ஸை கண்காணித்து இருக்க கூடாதா?) சேப்பாக்கம் மேடையில் அசடு வழியாமல் இருந்து இருக்கலாம்.


அபூஅப்துல்லாஹ் வாங்கிய சொத்து
அபூஅப்துல்லாஹ் அந்நஜாத் பெயரில் சொத்தை வாங்காமல் தன் பெயரில் வாங்கினார் என ஊரெங்கும் அவதூறு பரப்பி விட்டு, அவர் நீதிமன்றத்திற்கு இழுத்ததும். நான் அப்படி சொல்லவில்லை என நைசாக வழக்கிலிருந்து நழுவினார்.


சாமியாரிடம் ஆசிவாங்கிய ஜவாஹிருல்லாஹ்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவாடுதுறை ஆதீனத்திடம் திருக்குர்ஆன் வழங்கி பேசிக் கொண்டிருந்த படத்தை வெளியிட்டு சாமியாரிடம் ஆசி வாங்கினார் ஜவாஹிருல்லாஹ் என நாகூசாமல் அவதூறு பரப்புகிறார்.


பழநி பாபா வைத்திருந்தது யாரை?
மறைந்த பழனிபாபா கடையநல்லூரில் ஒரு பெண்னை வைத்திருக்கிறார் என செய்தி பரப்பினார். அதை கேட்டு கொதித்துப் போன பழனிபாபா பதிலுக்கு, “ நான் வைத்திருந்தது உன் மனைவியைத்தான்” என அவரிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.


இப்படி தனக்கு வரும் செய்திகளை ஆராயாமல் அள்ளிவிடுவதும் பின்னர் பொய்யை மறைக்க மேலும் பொய்களை கூறுவதும், பிறரின் மீது சேற்றை வாறி இறைக்க எத்தகைய அவதூறுகளையும் சுமத்துவதும், மற்ற தலைவர்களை தரம் தாழ்த்தி அவர்களின் மானத்தோடு கண்ணியத்தோடும் விளையாடுவதும் இவரின் கைவந்த கலை. இதற்காக எத்தகைய பொய்யையும் துணிந்து சொல்லக்கூடியவர் என்பதை அறிகிறோம்.



இவரது வாய் ஜலாத்திலிருந்து அல்லாஹ் எல்லா மக்களுக்கும் நேர்வழிக்காட்டடும்.